;
Athirady Tamil News

எனது சாப்பாட்டில் வி‌ஷத்தை கலக்க நிதிஷ்குமார் சதி: லாலு மகன் குற்றச்சாட்டு..!!

0

ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்கண்ட் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளர்.

இந்த நிலையில் அவரது மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மாநிலம் முழுவதும் ‘சம்விதான் பச்சோ’ என்ற பெயரில் யாத்திரை சென்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.

அவர், யாத்திரை காரணமாக தனது கட்சிக்கு மக்களிடம் பெருகி வரும் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பல்வேறு சதித்திட்டங்களை செய்ய முயற்சிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

நான் யாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இதனால் பயந்துபோன நிதிஷ்குமார் என்னை ஒழிக்க திட்டமிடுகிறார்.

நான் அரசு மாளிகையில் தங்கும் போது, உணவில் வி‌ஷம் வைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதேபோல் போதை மருந்துகளை உணவில் கலக்கவும் முயற்சிகள் நடக்கிறது. எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது. எப்படியாவது என்னை வீழ்த்தி விட வேண்டும் என்று அவர் கருதுகிறார். நிதிஷ்குமாரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நிதிஷ்குமார் ஜனநாயகத்துக்கு எதிரான சந்தர்ப்பவாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் தனது எதிர்ப்பாளர்களை ஒழிப்பதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார். 28 வயதே நிரம்பிய என்னை ஒழிப்பதற்கு ஏன் இவ்வாரெல்லாம் செயல்படுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தேஜஸ்வியாதவின் சகோதரரும், முன்னாள் மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவ் அவருக்கு அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்துள்ளார். இதற்கும் அவர் நிதிஷ்குமாரை குற்றம் சாட்டி இருக்கிறார்.

நிதிஷ்குமாரும், துணை முதல்-மந்திரி சுசில் குமாரும் அந்த வீட்டில் தனக்கு எதிராக பேயை ஏவி விட்டு இருக்கிறார்கள். எனவேதான் இந்த வீட்டை காலி செய்கிறேன். பேயை கண்டு எனக்கு பயம் இல்லை. நான் சிவபக்தன் என்று அவர் கூறி உள்ளார்.

தேஜ் பிரதாப் யாதவுக்கு ஜனதாதளம் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கிண்டலாக பதில் கொடுத்துள்ளார். அதில், தேஜ் பிரதாப்பின் குடும்பத்தை விட பெரிய பேய்கள் உலகத்தில் இல்லை என்று கூறி இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 15 =

*