;
Athirady Tamil News

சோனியா காந்தி நாளை ரேபரேலி செல்கிறார்..!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு செல்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில், நாளை ரேபரேலி தொகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெற உள்ள மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் எம்.பி. நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இருக்கிறார், என அவரது செய்திதொடர்பாளர் கே.எல்.சர்மா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*