;
Athirady Tamil News

2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்..!!

0

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்காக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றம்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் ஒ.பி.ஷைனி தெரிவித்தார்.

இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சி.பி.ஐ. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடி வந்தார். இவரை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து இருந்தது. தற்போது 2ஜி வழக்கில் இருந்து விலகுவதாக ஆனந்த் குரோவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − six =

*