;
Athirady Tamil News

ஒடிசா கடல் பகுதியில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி..!

0

ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள பரதிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் தனுஷ் ஏவுகணை இன்று காலை 10:52 மணிக்கு சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தனுஷ் ஏவுகணை 500 கிலோ கிராம் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதிலுள்ள இரண்டு என்ஜின்கள் திரவ எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரை மற்றும் கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணையில் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்பு உள்ளது. இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய பாதுகாப்புத்துறை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது. இந்த சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. முன்னதாக தனுஷ் ஏவுகணை 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 1 =

*