;
Athirady Tamil News

சமூகவலைதளம் மூலம் இளம்பெண்களை மயக்கி கூட்டு பலாத்காரம்: விசாரணையில் திடுக் தகவல்..!!

0

ஜேர்மனியில் சமூகவலைதளம் மூலம் இளம்பெண்களுடன் பழகி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுவந்த 4 நபர்கள் பிடிபட்டுள்ளனர்.

மேற்கு ஜெர்மன் பகுதியின் Essen நகரில் 16 வயது சிறுமி ஒருவர் மிக கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.அந்த கொடூர சம்பவம் குறித்து ஜேர்மன் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, 4 நபர்கள் அடங்கிய அந்த குழுவினர் சமூகவலைதளம் மூலம் இளம்பெண்களுடன் பேசி அவர்களை மயக்கி தனி இடத்துக்கு வரவழைத்து அவர்களை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த கூட்டத்தின் முக்கிய நபரான 18 வயது கொடூரன் ஒருவன், செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு பொலிசில் சரணடைந்துள்ளான்.மேலும், அந்த கூட்டத்தைச் சேர்ந்த மற்ற மூவரையும் பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 6 =

*