;
Athirady Tamil News

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதனால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு….!! (படங்கள்)

0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்தவர்கள் போக்குவரத்தில் தாமதத்தினை எதிர்கொண்டனர்.

குறித்த ரயில் நானுஓயா புகையிரத நிலையத்தில் தடம்புரண்டதாக நானுஓயா புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அதில் பயணித்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் தொடரும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*