;
Athirady Tamil News

17000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி: நெகிழ்ச்சி காரணம்..!!

0

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியர், தனது மகன் ஒலிம்பிக்கில் விளையாடுவதை பார்க்க, 17,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மிஷா எனும் பனிச் சறுக்கு வீரரும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் மிஷாவின் பெற்றோர், தங்களது மகன் பங்கேற்கும் போட்டியை காண தென் கொரியாவுக்கு வித்தியாசமான முறையில், சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே தங்கள் நாட்டில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 20 நாடுகளை தங்களின் பயணத்தில் கடந்த இவர்கள், 17 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, தற்போது தென் கொரியாவை அடைந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − ten =

*