;
Athirady Tamil News

களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…!!

0

வறட்சியான காலநிலை காரணமாக களு கங்கையுடன், கடல்நீர் சேருகின்றது.

இதன் காரணமாக களு கங்கையை அண்டிய சில பிரதேசங்களில் வாழும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர், அருந்துவதற்கு உகந்ததல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை – தெற்கு, நாகொடை மற்றும் போம்புவல முதலான பிரதேசங்களுக்கு இந்த நிலைமை தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிலிமத்தலாவை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்க்கா நகர் மற்றும் பெந்தரை முதலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அருந்துவதற்கு உகந்ததல்ல என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும், குறித்து நீரை வேறு நாளாந்த கடமைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குடிநீர் தேவையான பகுதிகளுக்கு கொள்கலன்கள் மூலமாக குடிநீரை விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 2 =

*