;
Athirady Tamil News

மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக்ச விரைவில் நேருக்குநேர் சந்திப்பு…!!

0

தம்மை சந்திக்க வரும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊடாக இந்த அழைப்பு மஹிந்த ராஜபக்சவிற்கு விடுத்திருப்பதாக அரச தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்காவின் அரசியல் நெருக்கடி உச்சத்தில் இருக்கின்ற நிலையிலும், அமைச்சரவை மாற்றம் இழுபறி நிலையில் காணப்படுகின்ற தருணத்திலும் அவ்வாறான அழைப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அதுமட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மூத்த அமைச்சர்கள் பலரும் தனியாட்சி ஒன்றை அமைக்குமாறும், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைத்துக் கொள்ளும்படியும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை நீக்கிவிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை அதற்குப் பதிலாக இணைத்துக் கொள்ளும்படியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு ஜனாதிபதி ஒருமாதகால அவகாசத்தைக் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*