;
Athirady Tamil News

கழுத்தை அறுக்கும் விவகாரம் பாரதூரமான செயல் – லண்டனில் அறிவிப்பு…!! (வீடியோ)

0

இலண்டனில் வைத்து தமிழர்களை கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் எச்சரித்திருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

இலண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை பார்த்து ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரி அச்சுறுத்தும் வகையில் சைகை காண்பித்த விவகாரத்தை பிரித்தானிய அரசு பாரதூரமான விடையமாக கருதியுள்ளதுடன் இது குறித்து ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரையும் தொடர்புகொண்டு கலந்துரையாடிய நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்காவின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பதாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ சைகை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் எழுந்த கடும் அழுத்தங்களை அடுத்து உடனடியாக செயற்பட்ட ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு அவரை பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்தது.

எனினும் இந்த உத்தரவு வெளியாகி 24 மணித்தியாலத்திற்குள் அதனை இரத்துச் செய்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை அதே பணியில் அமர்த்தினார்.

இந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அவசரமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டார். ஸ்ரீலங்கா இராணுவத் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நேற்றைய தினம் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்திருந்தார்.

இலண்டனில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் நாட்டிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, விசாரணைக்காக அவர் அழைக்கப்படவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டிற்கு அழைக்கப்படுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஆசிய வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு அதிகாரியின் செயல் குறித்தும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

இதனையடுத்து குறித்த படை அதிகாரி தொடர்புபட்ட விவகாரத்தை பாரதூரமான விவகாரமாக கருதி ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அவசரமாக நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றார்.

அதேவேளை அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம் என இராஜதந்திரிகளும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ) -இது எப்படி இருக்கு-

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.

“நான் ஏன், அப்படி செய்தேன்?”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

“நான் ஏன், அப்படி செய்தேன்?”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

கழுத்தை அறுக்கும் காணொளி; வெளியிட்ட ஈழம் ரஞ்சனின் முகநுால் முடக்கம்..! (வீடியோ & படங்கள்)

“கழுத்தை அறுப்பேன் என்றாரா?, கழுத்தை சொரிந்தாரா??”.. இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி..! (சிறப்புக் கட்டுரை)

http://www.athirady.com/tamil-news/news/1123807.html

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் பதவி விலகினார்…!!

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்…!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + seventeen =

*