அமெரிக்க தரத்தை எட்டியுள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத்துறை…!!

ஸ்ரீலங்காவின் சுகாதாரத்துறை அமெரிக்க தரத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நாட்டின் சுகாதார துறை உலகில் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுகாதார துறையில் முதலீடுகள் அவசியம் எனவும் கடனைப் பெற்று அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் துணிகள் உட்பட ஆடைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான உடன்படிக்கை நேற்று முந்தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் ஹாசீம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச மேலதிக செயலாளர் சந்திரகுப்த, உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஸ்ரீலங்காவின் சுகாதார துறை அமெரிக்கா மட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
கடனைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், முதலீட்டை பெற்ற அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவீனங்களை மிகப் பாரிய அளவில் தற்போதுள்ள அரசாங்கம் அதிகரித்துள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.