;
Athirady Tamil News

மலையகத்திற்கான தொடரூந்து சேவை வழமைக்கு திரும்பியது…!!

0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்து தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த மலையக தொடரூந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

நேற்று(23.02.2018) மாலை வேளையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்து தடம் விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

நானுஓயா ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு புறம் மட்டும் தொடரூந்து சேவை இடம்பெறும் எனவும், இரண்டாவது தொடரூந்து ஓடு பாதை மறுசீரமைக்கப்படுவதாகவும், அதன்பின் வழமைப்போன்று தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொழும்பு நோக்கிச் சென்ற உடரட மெனிக்கே தொடரூந்து சேவை இன்று(24.02.2018) காலை வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 7 =

*