யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு..!! (படங்கள்)

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.
யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று 23.02.2018 வெள்ளிக்கிழமை பி.ப 01 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் யோகதயாளன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாணவர்களின் மெய்வன்மை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், விருந்தினர்களால் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் யாழ்.மாவட்ட முகாமையாளர் செ.கோகுலதாஸ் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக திருநெல்வேலி இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி. யாமளை தனேஷ் அவர்களும் கலந்துகொண்டனர்.
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..