;
Athirady Tamil News

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடை பவனி…!! (படங்கள்)

0

கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித பொகொல்லாகம தலைமையில் தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நடை பவனி இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடுசெய்தன.

மட்டக்களப்பு, கல்லடி பாடுமீன் பூங்காவில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், இலங்கை தேசிய பாரிசவாத சங்கம உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய நடை பவனி, பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வேபர் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.

இந்த நடை பவனியில் நாடெங்கிலும் இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + sixteen =

*