;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் இப்படி செய்வது சட்டவிரோதம்: விரைவில் அமுலாகும் தடை சட்டம்..!! (வீடியோ)

0

சுவிட்சர்லாந்து கொதிக்கும் நீரில் Lobstersகளை போடுவதை சட்ட விரோதமாக அறிவித்த முதல் நாடாக ஆகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சமைக்கும் முன் கொதிக்கும் நீரில் Lobstersகளை போடுவது வழக்கமாக இருந்தது.

ஆனால் இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்களும் அறிவியலாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அவை மனிதர்களைப் போன்றதொரு வலியை உணர்வது நிரூபிக்கப்படாவிட்டாலும் அவற்றிற்கு வளர்ச்சியடைந்த ஒரு நரம்பு மண்டலம் உள்ளது.

எனவே அவை வலியை அனுபவிக்க நேரிடலாம் என்று சமீபத்தில் அறிவியலாளர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்

எனவே விலங்குகள் நலச் சட்டம் 2006இல் Lobstersகளையும் விலங்குகளாகச் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஆதரவாக 32,000 பேர் மனு ஒன்றில் கையொப்பமிட்டிருந்தனர், இதன்படி Lobstersகளை உயிருடன் கொதிக்கும் நீரில் போடுவது சட்ட விரோதமாகக் கருதப்படும்.

இதற்கான சட்டம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட உள்ளது, அச்சட்டத்தின்படி Lobstersகளை கொதிக்கும் நீரில் போடுவதற்குமுன் மின்சாரம் மூலமோ அல்லது கத்தியால் குத்தியோ செயலிழக்கச் செய்ய வேண்டும்.

இந்தச் சட்டம் உலகிலேயே Lobstersகளை சமைப்பதற்கான கடுமையான விதிகளை உடைய முதல் மற்றும் ஒரே நாடு என்னும் பெருமையை சுவிட்சர்லாந்திற்கு வழங்கியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*