;
Athirady Tamil News

வீட்டருகே நின்ற ஆம்புலன்ஸ் வாகனம்: கொச்சையாக பேசிய பெண் கைது..!!

0

பிரித்தானியாவில் வீட்டருகே நின்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை அகற்றக்கோரி பெண் ஒருவர் கொச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவில் அவசர ஊர்தி மருத்துவ பணியாளராக பணியாற்றி வருபவர் Katie Tudor.

பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் வழங்கிய புகார் ஒன்றில், “சாலையில் அவசர ஊர்திகளை நிறுத்துவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது, ஒரு பெண்ணின் வீட்டருகே நிறுத்தியதற்கு அவர் கொச்சையாக பேசுவது மன வருத்தத்தை அளிக்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.

குறித்த பெண் கூறுகையில், என் வீட்டருகே அந்த வாகனம் நிற்பது சங்கடத்தை ஏற்படுத்தியது, வீட்டருகே வசிப்பவர்கள் எங்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளதாக தவறாக நினைத்து கொள்கின்றனர், அதனால் அவ்வாறு எழுதினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு உரிய மரியாதையை தர மறுத்தல், பொது மக்களுக்கு தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குறித்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர் பிரித்தானிய பொலிசார்.

மேலும், இதற்கு முன்பும் இருமுறை இதே போன்ற சம்பவம் நடந்திருப்பதால் தான் பொலிசார் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 13 =

*