;
Athirady Tamil News

மாதர் அபிவிருத்தி பயிற்சியாளர்களின் கண்காட்சியும் ,விற்பனையும்…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும்,பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது .

அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட பொருட்களின் கண்காட்சியும் , விற்பனையும் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .

மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை திருமதி நந்தினி அன்ரனி ராஜார் ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்ததுடன் தையல் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .மோகன் பிறேம்குமார் , சிரேஷ்ட தையல் போதனாசிரியர் திருமதி என் . ரவிச்சந்திரன் ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் மற்றும் ஜெயந்திபுரம் , கருவேப்பங்கேணி பாரதிபுரம் , மட்டிக்களி , புன்னைச்சோலை ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளும் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*