;
Athirady Tamil News

சிறுவர் ஆபாச வீடியோக்களை பகிர்வதில் இலங்கை முன்னிலை…!!

0

வானொலிகளையோ, தொலைக்காட்சியையோ சுற்றியிருந்து புதினங்களை கேட்டு, பார்த்த சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் ஆளுக்கொடு தொடுதிரை கைப்பேசிகளை வைத்துக்கொண்டு உலகையே ஆட்டிப்படைக்கின்றனர்.

தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் பாரியளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அந்த வரிசையில் வாட்ஸ்எப் மூலமாக பல நன்மைகள் கிடைக்கின்ற போதும் அதற்கு சமனான பிரதிகூலமாக விடயங்களும் இடம்பெறுகினறன.

அண்மைய ஆய்வுகளின் படி சிறுவர் ஆபாச காணொளிகளை அதிகம் பகிரும் நாடாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக இந்திய மத்திய விசாரணைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் ஆபாச காணொளிகளை பகிரும் குழுவொன்று அண்மையில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்எப் குழுக்கள் ஆபாச காணொளிகள ஊடாக பகிரும் குழுவொன்று டெல்லியை தளமாக கொண்டு இயங்கி வந்துள்ளமை அண்மையில் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

119 அங்கத்தவர்களுடன் அந்த குழு இயங்கி வந்துள்ளது.

இதில் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட சிறுவர் ஆபாச காணொளிகள் ஆயிரக்கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உலகளாவிய குற்றமாக இதனை வகுத்துள்ள இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழு வாட்ஸ்எப் குழுவின் பங்காளிகளான சீனா, பாகிஸ்தான், பிரேசில், ஆப்கானிஸ்தான், கென்யா, நைஜீரியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளை அடையாளப்படுத்தியுள்ளன.

அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடி விசாரணைகள் மற்றும் கைதுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழுவினால், இந்த வாட்ஸ்ஆப் குழுவின் நிர்வாகிகள் ஐவரை கைதுசெய்துள்ளது.

இதன்படி கூடிய விரைவில் இதுபோன்ற காணொளிகளை இலங்கையிலிருந்து தரவேற்றம் செய்யும் மற்றும் பகிரும் சந்தேகநபர்களை இலங்கை அரசின் உதவியுடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ஐ. விடுத்துள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 6 =

*