;
Athirady Tamil News

யானை வழித்தடங்களில் கட்டுமானப்பணி தடைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

0

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் விசாரணை தொடங்கியதும், இந்தியா முழுவதும் யானை வழித்தடங்களில் கட்டுமானப்பணிக்கு தடை கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவுடன், இந்த மனுக்களையும் இணைத்து 4 வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 5 =

*