;
Athirady Tamil News

இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் – சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா…!!

0

இந்தியாவில் 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என சுகாதார துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் தேசிய மெடிகாஸ் அமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவை தவிர பிற நாடுகள் 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் நீக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்தியாவில் 2025-ம் ஆண்டிற்குள் காச நோயை அறவே ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அரியானா நிதி மந்திரி அபிமன்யு பேசுகையில், இப்போதைய மத்திய அரசு மருத்துவ துறையில் புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*