;
Athirady Tamil News

செல்போனுக்கு பதில் விளையாட்டு பொம்மையை பார்சலில் அனுப்பி நூதன மோசடி..!!

0

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தை சேர்ந்தவர் கோபி (வயது 39). ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இவரது செல்போனில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு வாலிபர், குறைந்த விலையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குகிறோம் என்று கூறினார். மேலும் தினமும் போனில் பேசி அந்த வாலிபர் கோபியிடம் நச்சரித்துள்ளார். மேலும் பார்சலில் செல்போனை பெற்ற பிறகு பணத்தை கொடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இதனால் ஸ்மார்ட் செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரூ.3 ஆயிரத்தை அந்த வாலிபர் கூறியப்படி தபால் நிலையத்தில் பணத்தை அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் தபால் நிலையத்தில் இருந்து கோபிக்கு ஒரு பார்சல் வந்தது. பார்சலை வாங்கிய அவர் நேராக வீட்டுக்கு வந்தார்.

பின்னர் வீட்டில் வைத்து செல்போனை பார்க்க வேண்டும் என்று ஆசையாக பார்சலை பிரித்த கோபி அதிர்ச்சி அடைந்தார்.

செல்போனுக்கு பதில் சிறுவர்கள் பயன்படுத்தும் பம்பர விளையாட்டு பொம்மை இருந்தது. இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து அவர் தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் இயக்கத்திடம் புகார் செய்தார். இந்த சம்பவம் பற்றி கோபி கூறியதாவது:-

செல்போனில் பேசிய வாலிபர் குறைந்த விலையில் செல்போன் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி எனது மனைவியின் கொலுசை வாங்கி அடகு வைத்து ரூ.3 ஆயிரம் பணம் அனுப்பினேன்.

தபால் நிலையத்தில் இருந்து வந்த பார்சலை பிரித்த பிறகுதான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*