;
Athirady Tamil News

சாகும் தருவாயில் இருந்த காதலி: இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலன்…!!

0

அமெரிக்காவில் இறக்கும் தருவாயில் இருந்த காதலியின் ஆசையை காதலன் நிறைவேற்றியிருப்பது பலரின் உள்ளங்களையும் நெகிழ வைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டீனி. 19 வயதான இவர் சிறுநீரக புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமானதால், இரண்டு தினங்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது டீனின் பெற்றோர் அவரிடம் இறுதி ஆசை என்ன என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் இறப்பதற்குள் தனது காதலனை மணந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட காதலன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தனது காதலியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காதலர் தினமான கடந்த 14-ஆம் திகதி, டீனியை மருத்துவமனையில் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார், அத்துடன், இவர்களின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த மகிழ்ச்சியை முழுவதுமாக கொண்டாடுவதற்குள் திருமணம் ஆன 48 மணி நேரத்தில் டீனி மருத்துவமனையிலியே இறந்து விட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 5 =

*