;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

0

பிரித்தானியாவில் மதுவுக்கு அடிமையான நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், 60 நாட்கள் மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளது.

பிரித்தானியாவின் Essex பகுதியில் உள்ள Harlow Mill இரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் Derek Acton(44) என்ற நபர் அளவிற்கு அதிகமாக மது அருந்தி சுயநினைவற்ற நிலையில், இரயில்வே டிராக்கில் அங்கும் இங்கும் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் பிளாட்பார்மில் இருந்து கிழே இறங்கிய அவர், நூலிழையில் இரயில் மீது மோதமால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், இரயில்வே அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது,அவர் எந்த வித காயமுமின்றி இருந்துள்ளார்.

அதன் பின் அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவுக்கு அடிமையான இவருக்கு மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட 12 மாதங்கள் சிகிச்சை அளிக்கும் படியும், 60 நாட்கள் மது குடிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி £570 பவுண்ட் அபராதம் செலுத்தும் படியும் தெரிவித்துள்ளார்.

அவர் அதிர்ஷ்டவசமாக இரயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − three =

*