;
Athirady Tamil News

அமைச்சரவை மாற்றம் இன்று; அர்ஜுன வௌிநாடு சென்றார்…!!

0

அமைச்சரவை மாற்றம் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அமைச்சர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்ந்து பிற்போடப்பட்டு வந்தது.

அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அதிகாலை 3.00 கட்டார் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர இன்னும் சில அமைச்சர்கள் இன்று மாலை வௌிநாடு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்று காலை அமைச்சரவை மாற்றம் நிகழும் என்று தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eight =

*