;
Athirady Tamil News

யாழில் காலநிலை மாற்றத்தால் இரண்டு முதியவர்கள் மரணம்…!!

0

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் குளிரால் நேற்றைய தினம் இரண்டு முதியவர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது நிலவும் கடும் பனியுடன் கூடிய குளிரான காலநிலையால் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் இவர்கள் உயிரிழந்தனர்.

நேற்றுகாலை கடும் குளிரால் இவர்கள் அவதிப்பட்டனர். மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இவர்கள் உயரிழந்தனர்.

திருநெல்வேலி கிழக்கு, முருகன் வீதியை சேர்ந்த கந்தையா ஜீவரட்ணம் (வயது 59), சண்டிலிப்பாய் மத்தியை சேர்ந்த இளைப்பாறிய அதிபர் இராமன் சின்னத்தம்பி (75) ஆகிய இருவருமே மரணமாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*