;
Athirady Tamil News

பிரித்தானியாவில் STRAWS-ஐ தடை செய்ய அரசு திட்டம்…!!

0

பானங்கள் அருந்துவதற்காக பயன்படும் STRAWS எனும் பிளாஸ்டிக் குழாய்கள் பிரித்தானியாவில் பிரக்ஜிடுக்கு பின்னர் தடைசெய்யப்படலாம் என நாட்டின் சுற்றுசூழல் செயலாளர் மைக்கேல் கோவ் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் STRAWS பயன்படுத்தப்படுகின்றது என கடல் பாதுகாப்பு சங்கம் தெரிவிப்பதுடன், கடற்கரையோரங்களில் அகற்றப்படும் கழிவுப்பொருட்களில் STRAWS அதிகமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில்STRAWS எனும் பிளாஸ்டிக் குழாய்களை தடை செய்ய திட்டமுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சக செயளாளர் Michael Gove கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், பானங்கள் அருந்துவதற்காக பயன்படும் பிளாஸ்டிக் குழாய்கள் தவறு என்றால் அதற்கு தடை விதிப்பது தான் சரியானதாக இருக்கும்.

STRAWS மக்குவதற்கு சுமார் 500 வருடங்கள் வரை ஆகும். 2019ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக பிளாஸ்டிக் குழாய்களின் பயன்பாடு இல்லாமல் செய்ய திட்டம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதைபோன்றே அடுத்துவரும் 25 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை அறவே இல்லாமல் செய்ய வேண்டும் என பிரதமர் தெரசா மே கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*