;
Athirady Tamil News

பாரீஸில் 80 வயது மூதாட்டி மீது தாக்குதல்: பொலிசார் வைத்துள்ள கோரிக்கை…!!

0

பிரான்ஸில் 80 வயது மூதாட்டி தாக்கப்பட்டு அவரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.

பாரீஸில் உள்ள rue de lagny வீதியில் தான் இச்சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

80 வயதான மூதாட்டி கடைகளில் பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவரின் பணத்தை திருடிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், கொள்ளையர்கள் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தாலோ அல்லது சம்பவத்தை நேரில் பார்த்திருந்தாலோ எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*