;
Athirady Tamil News

அதிர்ச்சியாக உள்ளது: ஸ்ரீதேவி மறைவுக்கு ரஜினி மற்றும் கமல் இரங்கல்…!!

0

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாரடைப்பால் காலமானார்.

அவரின் திடீர் மறைவு இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலக ஜாம்பவான்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில், அதிர்ச்சியளிக்கிறது, நான் எனது அன்பு நண்பரையும், திரையுலகம் உண்மையான லெஜண்டையும் இழந்துள்ளது, அவர் குடும்பத்தின் வேதனையை நானும் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது பதிவில், டீன் ஏஜ் பருவத்திலிருந்து ஸ்ரீதேவியின் வாழ்க்கையை நான் பார்த்துள்ளேன். இந்த புகழுக்கு அவர் மிகவும் தகுதியானவர்.

அவருடன் நான் பழகிய மகிழ்ச்சியான தருணங்கள் என் மனதில் வந்து போகிறது, நான் அவரை மிஸ் செய்வேன் என பதிவிட்டுள்ளார்.

இதே போல திரிஷா, கவுதமி, ஜெயபிரதா, குஷ்பு, சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைளும் ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Rajinikanth‏

I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev … you will be missed.

Kamal Haasan‏

Have witnessed Sridevi’s life from an adolescent teenager to the magnificeint lady she became. Her stardom was well deserved. Many happy moments with her flash through my mind including the last time I met her. Sadma’s lullaby haunts me now. We’ll miss her.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 3 =

*