;
Athirady Tamil News

பள்ளிக்கு வெளியே மாணவியின் தலையை துண்டாக வெட்டிய இளைஞர்: நேரில் பார்த்த ஆசிரியர்…!!

0

இந்தியாவில் பள்ளி மாணவியை இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் Kotma பகுதியைச் சேர்ந்தவர் Pooja Panika. இவர் அங்கிருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெற்று வருவதால், பூஜா சம்பவ தினத்தன்று 1 மணி தேர்விற்கு 12.30 மணி அளவில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் மாணவிக்கு சில அடி தூரம் நின்று கத்தியை வைத்து மாணவியின் தலையை வெட்டிவிட்டி அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதைக் கண்ட பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் தப்பியோடியுள்ளான்.

இச்சம்பவம் குறித்து அந்த ஆசிரியர் கூறுகையில், திடீரென்று வந்த நபர் நீளமுள்ள கத்தியை எடுத்து மாணவியின் தலையில் மூன்று முறை வெட்டினான்.

இதில் மாணவி சம்பவ இடத்திலே துடி துடித்து இறந்தார்.

அதன் மாணவியின் பெற்றோர் தன் மகளை கொலை செய்தது Dilip Sahu என்ற இளைஞர் தான் என கூறியுள்ளனர். ஏனெனில் பல வருடங்களாக அவன் பூஜாவை பின் தொடர்ந்து வந்தாகவும், ஆனால் பூஜா அவரை கண்டு கொள்ளவே இல்லை, இதனால் அவன் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*