;
Athirady Tamil News

துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தலை: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!

0

ஜப்பானில் மாயமான பெண் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் அவரின் தலை சிக்கியுள்ளது.

ஜப்பானில் 27 வயது பெண் ஒருவர் மாயமானது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்கர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட தலை ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தலை, மாயமான பெண்ணின் தலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் Hyogo மாவட்டத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் மாயமானதாக பொலிசாருக்கு புகார் வந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், Nara மாவட்டத்தில் இருந்து 26 வயதான அமெரிக்க இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

மாயமாவதற்கு முன்னர் குறித்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜே. என்பவரை சந்திக்க செல்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மட்டுமின்றி கண்காணிப்பு கமெராவில், ஒரு ஆணும் பெண்ணும் சந்தேக நபரின் விடுதிக்குள் நுழைவதாக பதிவாகியுள்ளது.

மேலும், அந்த விடுதியில் இருந்து பின்னர் குறித்த பெண் வெளியேறவில்லை எனவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதனையடுத்தே விசாரணை அதிகாரிகள் குறித்த அமெரிக்க நாட்டவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 18 =

*