;
Athirady Tamil News

நடிகையாக போகும் மகளுக்கு கடைசியாக ஸ்ரீதேவி செய்த அறிவுரை..!!

0

ஸ்ரீதேவி மரணமடைவதற்கு முன்னர் திரையுலகில் அறிமுகமாகும் தனது மகள் ஜான்விக்கு அவர் அளித்த அறிவுரை குறித்து தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரியளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஜான்வியும் திரையுலகில் நுழைந்துள்ளார். அவர் நடித்துள்ள ததாக் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒரு தாயாக ஜான்விக்கு ஸ்ரீதேவி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

சில பேட்டிகளின் போதே இதை அவர் கூறியுள்ளார். ஒரு பேட்டியில், இதை எல்லா தாய் சார்பாகவும் கூறுகிறேன், சினிமாவுக்கோ அல்லது வேறு தொழிலுக்கோ செல்லும் மகள்கள் சரியான விடயங்களை செய்ய வேண்டும். அதாவது 100 சதவீதம் கடுமையாக உழைக்க வேண்டும்.

அது நமக்கு பலன் தரும் என கூறியுள்ளார். இன்னொரு பேட்டியில், ஜான்வி சினிமாவுக்கு வந்தால் அவரை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை எப்படி சமாளிப்பார் என கேட்கப்பட்டது.

அதற்கு, பாலிவுட் சினிமாவில் இது போன்ற அழுத்தத்தை எல்லாம் சந்திக்க வேண்டும், அதற்கு ஜான்வி தயாராக உள்ளார்.

நானும் அதற்கு தயாராக உள்ளேன், என் தாய் எனக்கு எப்படி ஆதரவளித்தாரோ அதே போல என் மகளுக்கு நான் ஆதரவளிப்பேன் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − thirteen =

*