;
Athirady Tamil News

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம் மக்கள் விசனம்…!! (படங்கள்)

0

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தப்போக்கு காரணமாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா யாழ் வீதியில் வடிகால் கட்டமானத்திற்காக வெட்டப்படட பாரிய கிடங்கு தவறான முறையில் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிதது அதனை செப்பனிடாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காணப்பட்டு வருவதாகவும் இக் கிடங்கு பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இக் கிடங்கு நீர் தேங்கி நிற்கக்கூடிய வகையில் காணப்படுவதனால் நுளம்பு பெருக்கம் ஏற்பட வாய்ப்பள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் இக் கிடங்கு காணப்படும் இடத்திற்கு அண்மையாகவே சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளமையினையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் யாழ் வீதியில் விவசாய பண்ணையோரமாக வெட்டப்பட்ட வடிகான்களினூடாக நீர் வழிந்தோட முடியாதுள்ளமையினாலி; நீர் தேங்கி நின்று நுளம்பு பெருக்கம் ஏறபட்டுள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட:டுகின்றனர்.

எனவே இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மகக்ளுக்கு ஏற்படவுள்ள நோய்த்தாக்கம் உட்பட அனர்த்தங்களை தடுக்கவழிவகை செய்யவேண்டும் என கோருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − eight =

*