;
Athirady Tamil News

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு…!! (படங்கள் & வீடியோ)

0

வவுனியா கொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள (அப்ரியல்) அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ரகுநாதன் சுகிர்தரன் வயது 31 என அடையாளம் காணப்பட்டள்ளார்.

குறித்த அரசார்பற்ற நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றி வந்தவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் ( 24.02.2018) மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களுடன் மதுபானம் அருந்தியதாகவும் இன்று காலை வெகு நேரமாகிய நிலையில் குறித்த நபர் அறையினை விட்டு வெளியே வரதா காரணத்தினால் விடுதியில் தங்கியிருந்த சக ஊழியர்கள் அறையின் கதவினையுடைத்துள்ளார். அதன் போது ரகுநாதன் சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*