;
Athirady Tamil News

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி தருணங்கள்…!! (படங்கள் & வீடியோ)

0

மறைந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமணம் ஒன்றில் பங்கேற்றதுதான் அவரது கடைசி நிகழ்ச்சியாகும்.

இத்திருமண விழாவில் ஸ்ரீதேவி பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் துபாயில் நடந்த நடிகரும் உறவினருமான மோஹித் மார்வா திருமணத்துக்கு சென்றனர்.

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது.

இவரது மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. உடற்பயிற்சி செய்து தனது உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாரா என்று அவரது நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவர் கடைசியாக கலந்து கொண்ட மோஹித் மார்வாவின் திருமண விழாவில் எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்த்து திரையுலகினரும் ரசிகர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திக்கு….

அதிர்ச்சியாக உள்ளது: ஸ்ரீதேவி மறைவுக்கு ரஜினி மற்றும் கமல் இரங்கல்…!!

நடிகை ஸ்ரீதேவி காலமானார்…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − three =

*