;
Athirady Tamil News

வனராஜா தேயிலை தொழிற்சாலை பகுதியில் தீ விபத்து; 3 ஏக்கர் காடு நாசம்..!!

0

வனராஜா தேயிலை தொழிற்சாலை பகுதியில் தீ விபத்தால் 3 ஏக்கர் காடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் கடும் வரட்சி நிலையால் தொடர்ந்து காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கருகிலே 25.02.2018 மாலை 4 மணியளவில் தீ பரவியுள்ளது.

இதனடிப்படையில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்லைக்கருகிலே தீ பற்றியமையினால், மூன்று ஏக்கர்வரையிலான காடு எரிந்து நாசமாகியது, மலையகத்தில் கடும் வரட்சி காலநிலை நிலவி வருகின்ற நிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் செயல் ஈடுபட்டு வருவதால், விசமிகளினால் காட்டுப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என அட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர் மேலும் தீ விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 5 =

*