;
Athirady Tamil News

35 அடி பள்ளத்தில் பாய்ந்து ஜீப் ரக வண்டி விபத்து – மதகுரு உட்பட மூவர் காயம்..!!

0

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில், இன்று (25.02.2018) காலை 11.35 மணியளவில் ஜீப் ரக வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ் செய்த மதகுரு உட்பட மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கணை ஹசலக பகுதியிலிருந்து, சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காகச் சென்று மீண்டும் மஹியங்கணை ஹசலக பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 5 =

*