;
Athirady Tamil News

18 மணிநேரம் வேலை செய்ய கொடுமைப்படுத்திய பெண்மணிக்கு 18 மாதங்கள் சிறை..!!

0

பிரான்ஸில் 18 மணிநேரம் வேலை செய்யக்கோரி பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய பெண்மணிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் Châtenay-Malabry(hauts de seine) பகுதியைச் சேர்ந்த Astan (வயது 31) என்ற இளம்பெண் கடந்த 2000-ஆம் ஆண்டு மாலியில் இருந்து பிரான்சுக்கு பிழைப்பு தேடி வந்துள்ளார்.

13 வயது சிறுமியாக வந்த அந்த பெண்ணை வேலைக்கு சேர்த்துக்கொண்ட பெண் ஒருவர், தினமும் 18 மணிநேரம் வேலை செய்யும்படி கொடுமைப்படுத்தியுள்ளார்.குறித்த பெண்ணின் வீட்டில் 13 நபர்கள் இருந்துள்ள நிலையில் அனைவருக்குமான பணியை இந்த பெண் ஒற்றை ஆளாக சமாளிக்க முடியாமல் இந்த கொடுமையை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், Astan என்ற அந்த பெண் அனுபவித்து வந்த கொடுமைகளை உறுதி செய்த பின் குறித்த 54 வயது பெண்மணிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும், 60 ஆயிரம் யூரோக்களை அபராதமாகவும் குறித்த பெண்ணுக்கு விதித்துள்ளனர் நீதிபதிகள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 9 =

*