பிரித்தானியாவில் பெரும்பாலான KFC உணவகங்கள் மூடல்: இறைச்சி திருடும் வீடியோ வெளியானது..!!

இறைச்சி பற்றாக்குறை காரணமாக பிரிட்டனில் உள்ள பெரும்பாலான KFC உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த KFC நிறுவனம் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கடைகளை வைத்துள்ளது, இங்கு விற்பனை செய்யப்படும் சிக்கனின் சுவை மக்களை கவர்ந்திழுக்கும்.
இந்நிலையில் KFC நிறுவனத்துக்கும், கோழிக்கறியை டெலிவரி செய்யும் DHL நிறுவனத்துடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையால், இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக KFC நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே மொத்தம் உள்ள 900 KFC உணவகங்களில் 600 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக KFC நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் KFC-யின் ஒரு கிளையில் வேலை செய்யும் தொழிலாளர்களே கோழி இறைச்சியை திருடும் வீடியோ வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனின் Erith-ல் உள்ள KFC உணவகத்தின் அருகில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
சுமார் 6 கருப்பு பைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை, KFC நிறுவனத்தின் சீருடை அணிந்துள்ள தொழிலாளர்கள் உணவகத்தின் பின்வாயிலில் இருந்து வோல்வோ காருக்கு கடத்துவது போன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது