;
Athirady Tamil News

13 குழந்தைகளுக்கு தந்தையான 28 வயது இளைஞர்: சுவாரஸ்ய சம்பவம்..!!

0

தாய்லாந்து நாட்டிலுள்ள வாடகைத் தாய்மார்கள் மூலம் பெற்றெடுத்த 13 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதற்கான உரிமையை ஜப்பானிய இளைஞர் போராடி கைப்பாற்றியுள்ளார்.

இதில் 13 குழந்தைகளையும் தமது சொந்த குழந்தையாகவே வளர்க்கும் உரிமையை 28 வயதான Mitsutoki Shigeta நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, வாடகைத் தாய்மார்கள் மூலம் தாய்லாந்தில் 16 குழந்தைகளுக்கு தாம் தந்தையாக இருப்பதை Mitsutoki Shigeta முதன் முறையாக வெளியிட்டார்.

இவரது இந்த வெளிப்படுத்தல் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் வெளிநாட்டவர் தாய்லாந்தில் வாடகைத் தாய் அமர்த்தி குழந்தை பெற்றுக்கொள்வதை தடை செய்வதற்கு இவரது வழக்கு வழிவகுத்தது.

இதனையடுத்து தாய்லாந்தை சேர்ந்த வாடகைத் தாய்கள் தங்களுடைய உரிமையை இழந்த பின்னர், Mitsutoki Shigeta தான் தந்தை என்ற உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே இவரது சட்டப் போராட்டத்தால் 2015 ஆம் ஆண்டு எஞ்சிய 3 குழந்தைகளை இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − three =

*