;
Athirady Tamil News

மாயமான வளர்ப்பு பூனையை தேடிய நபர்: மிரள வைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

0

தாய்லாந்தில் நபர் ஒருவர் தமது செல்லப் பூனை மாயமானதாக கூறி வீட்டில் எங்கும் தேடிய நிலையில் 12 அடி மலைப்பாம்பு சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் Nom Pitsanu என்ற அந்த 50 வயது நபர் தமது செல்லப் பூனை மாயமானதாக கூறி வீட்டில் எங்கும் தேடியுள்ளார்.

அப்போது வீட்டின் தோட்டத்தில் மறைவான பகுதியில் மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு அவர் மிரண்டுள்ளார்.

தமது வளர்ப்பு பூனையை அந்த மலைப்பாம்பு தின்றிருப்பதை உறுதி செய்த அவர், உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்

தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் குறித்த பாம்பை அந்த தோட்டத்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

பின்னர் அதன் மீதிருந்த காயங்களுக்கு மருந்து வைத்து, அதன் நீளத்தை அளந்துள்ளனர். அதில் அது 12 அடி நீளம் இருந்துள்ளது.

இரவு அனைவரும் தூங்கிய நிலையில் குறித்த பாம்பு தோட்டத்துக்குள் நுழைந்திருக்கலாம் எனவும், அதன் பின்னர் தமது பூனையை உணவாக்கியிருக்கலாம் எனவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*