;
Athirady Tamil News

வவுனியாவில் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா…!! (படங்கள்)

0

வவுனியா இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிஸேச சபையின் ஆலயத்தில் நேற்று 23.02.2018 மாலை 5மணியளவில் பிரதான பிஸப் பி. எம். இராஜசிங்கம் தலைமையில் இலங்கை அப்பலோ வேதாகமம் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 12பேருக்கு இளநிலைப்பட்டமளிப்பும் 14பேருக்கு முதுநிலை பட்டமளிப்பும் இரண்டு கௌரவ வைத்தியர் சேவைக்கான பட்டமளிப்பும் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சமுதாய முன்னேற்றப்பணிக்கான சிறப்புப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பலோ வேதாகமப் பல்கலைக்கழகத்தின் தலைவர், துணைத்தலைவர், பேராசிரியர்கள், நிர்வாகத் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு விருதினை வழங்கிவைத்தனர். பொலிசார் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன்

வவுனியா, திருகோணமலை, யாழப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ளவர்களுக்கும் பட்டமளிப்பில் கலந்துகொண்டனர்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 7 =

*