;
Athirady Tamil News

ஜீப் வண்டி விபத்து :மதகுரு உட்பட மூவர் படுகாயம்…!! (படங்கள் & வீடியோ) இணைப்பு

0

மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 11.35 மணியளவில் ஜீப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதில் பயணஞ் செய்த மதகுரு உட்பட மூவர் படுகாயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்றவர்கள், மஹியாங்கனை – ஹசலக பாதை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த ஜீப் வண்டி சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

இணைப்பு…

35 அடி பள்ளத்தில் பாய்ந்து ஜீப் ரக வண்டி விபத்து – மதகுரு உட்பட மூவர் காயம்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 5 =

*