;
Athirady Tamil News

மத்திய அரசு ஒத்துழைத்தால் மாத்திரமே அபிவிருத்தி திட்டங்களை செய்யகூடியதாக உள்ளது…!! (படங்கள்)

0

மத்திய அரசு ஒத்துழைத்தால் மாத்திரமே அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் செய்யகூடியதா உள்ளது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் பாவற்குளம் கிராமத்தின் சமூக பொருளாதார வளர்சியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மண்வாசம’; அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர்

வவுனியா பாவற்குளம் மகா வித்தியாலயமானது யுத்தத்துக்கு முன்னர் பல சாதனைகளை ஏற்படுத்தியிருந்தது. இன்று பின்தங்கிய நிலையில் காணப்படும் இப் பாடசாலையானது யுத்தம் காரணமாக சீரழிந்துள்ளது.

எமது எல்லை பிரதேசங்கள் எல்லாம் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் எமது பிரதேசத்தின் எல்லை கிராமங்களை பாதுகாக்க எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் அது வெற்றி அளிப்பதாக இல்லை!

மேலும் இப்பிரதேசத்தின் அருவித்தோட்டம் பகுதியும் மற்றும் மதகுவைத்தகுளம் பகுதியிலும் மொத்தமாக 250 ஏக்கர் வயல் நிலங்கள் இன்று நீர் இன்றி அழியும் நிலையில் உள்ளதுடன் பாவற்குளத்தில் உள்ள நீரை அந்த விவசாய நிலங்களுக்கு வழங்கினால் அவை தப்பிவிடும் ஆனால் அந்த விவசாய மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கீழ் இருக்கும் நீர்ப்பாசன திணைக்களம் கவனத்தில் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

பாவற்குளமானது எமது வடமாகாண அமைச்சின் கீழ் இல்லை, மத்திய அமைச்சின் கீழேயே உள்ளது இவ்வாறான நிர்வாக சிக்கல்கள் எமது பிரதேசத்தில் இருப்பதால் பல அபிவிருத்தி திட்டங்களை எம்மால் செய்யமுடியாமல் உள்ளது மத்திய அரசு ஒத்துழைத்தால் மாத்திரமே அபிவிருத்தி திட்டங்களை செய்யகூடியதான நிலை இங்கு காணப்படுகின்றது என தெரிவித்தார்.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்னன், பாவற்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஐ. சமரதுங்க, ‘மண்வாசம்’; அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ். கணேசலிங்கம் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*