;
Athirady Tamil News

வவுனியாவில் காதலன் இறந்த துயரத்தால் காதலியும் தற்கொலை…!!

0

வவுனியாவில் காதலன் இறந்த துயரம் தாங்காமல் காதலியும் கிணற்றில் பாய்ந்து தற்கொலை!!

வவுனியவில் காதலன் இறந்த துயரம் தாங்காமுடியாமல் காதலியும் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது

வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் காதல் பிரச்சனையே தற்கொலைக்கு காரணம் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வசித்து வந்த குறித்த இளைஞனின் காதலியும் துக்கம் தாளாமல் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

தொடர்புபட்ட செய்திக்கு….

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு…!! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 1 =

*