;
Athirady Tamil News

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு…!!

0

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு :மற்றொருவரைக் காணவில்லை.

திருகோணமலை – மனையாவெளி கடல் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மனையாவெளி சாரணர் வீதியைச் சேர்ந்த இராசலிங்கம் சிந்துஜன் (வயது 16) என்பவரது சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடலில் குளிப்பதற்காக சென்ற மற்றொரு இளைஞர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி காணாமல்போன இளைஞனைத் தேடும் பணியில் கடற்படையினர், மீனவர்கள், பொது மக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து “கோணேஸ்வரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + twenty =

*