;
Athirady Tamil News

சிலாபம் எலிவிடிய சந்தியில் விபத்து – 12 பேர் காயம்…!!

0

சிலாபம், எலிவிடிய சந்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 14 =

*