;
Athirady Tamil News

சீனாவில் முதியவர் ஆவேசம் – கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி..!!

0

சீனாவில் சில பயங்கரவாதிகளும், விரக்தி அடையும் நபர்களும் அவ்வப்போது கத்திக்குத்து தாக்குதல்களில் ஈடுபட்டு பலரை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் 53 வயது முதியவர் தனது வீட்டில் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தனர். கொலையாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மாதத்தில் சீனாவில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11-ம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 35 வயது நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*