;
Athirady Tamil News

வியானா நீரோடையில் மீண்டும் வாகன விபத்து..!!

0

பதுளை, மஹியங்கன வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டர் வாகனம் ஒன்று இன்று (26) காலை 6.20 மணியளவில் மாபாகட வெவ, 17 ஆம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டிருப்பதுன் ஒருவரை காணவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஆசிரியை ஒருவர், ஆசிரியர்கள் இருவர் மற்றும் வங்கி அதிகாரியொருவர் இம்மோட்டர் வாகனத்தில் பதுளையில் இருந்து மஹியங்கன நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டிருப்பதுன் ஒருவரை காணவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

மஹியங்கன பொலிஸ் அதிகாரிகள் காணமல் போனவரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும் விபத்தில் சிறு காயமடைந்த ஆசிரியை மஹியங்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*