;
Athirady Tamil News

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 4134 ஏக்கர் நிலம் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை..!! (படங்கள்)

0

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 4134 ஏக்கர் நிலம் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை!
மகாவலி திட்டத்தினூடாக நீரை குளத்திற்கு கொண்டுவர அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

பாவற்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் கோரிக்கை!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாவற்குளம் விவசாயக் கிராமத்தில் 4 ஆயிரத்து 134 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பயிர் செய்யப்படவில்லை என பவற்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் ராசதுரை சிவபாலன் தெரிவித்தார்.

பாவக்குளம் விவசாயக் கிராமத்தில் 1378 குடும்பங்கள் நெற் செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் இந் நிலங்களை நம்பி கூலித்தொழில் செய்யும் 1000 குடும்பங்கள் கடும் வறட்சி காரணமாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாவற்குளத்தில் தமிழ்,சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களை சேர்ந்த 11 கமக்கார அமைப்புக்கள் இயங்கி வருவதுடன் பவற்குளத்திலிருந்து இரண்டு துருசுகள் வழியாக வலதுகரையூடாக 2 ஆயிரத்து 310 ஏக்கர் விவசாய நிலத்திற்கும், இடதுகரையூடாக ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய நிலத்திற்கும் நீர் திறந்து விடப்படுகிறது.

இருந்தபோதும் கடும் வரட்சி காரணமாக பாவற்குளத்தில் 10 அடி தண்ணீரே இருக்கம் நிலையில் துருசுகள் திறக்கப்படும் போது 05 அடி நீரே பாயும் நிலை காணப்படுவதால் அதை வைத்து ஒருவர் கால் ஏக்கர் நிலங்களையே செய்யக்கூடியதாக இருக்கிறது. ஆகNவு முழுமையாக நெற்செய்கையில் ஈடுபட சித்திரை மதம்வரை மழையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கமக்கார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

மேட்டு நிலத்தில் மழையை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட 20 குடும்பங்கள் மழை நீர் பொய்த்துபோனதால் கிணற்றிலிருந்து நீரை இறைத்து நெற்செய்கையில் ஈடுபட்டதுடன் 20 வீதமான வழைச்சலை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஒரு கிலோ நெல்லை 50 ரூபா வீதம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார்.
பவற்குளத்தை நம்பியே விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் நிவாரணங்கள் ஏதும் இன்னும் வழங்கப்படவில்லை.

அத்துடன் நெற்செய்கையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந் நிலங்களில் கூலிவேலை செய்யும் குடும்பங்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படவில்லை.

அரசாங்கம் மகாவலித்திட்டத்தினூடாக பாவற்குளத்திற்கு நீரை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இவ்விவசாயக் கிராமம் பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்பதுடன் மக்கள் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைகளை தேடி செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 5 =

*