;
Athirady Tamil News

கிளிநொச்சி யுனைடெட் விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி யுனைடெட் விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கி வைப்பு

கிளிநொச்சி ஆனந்தபுரம் யுனைடெட் விளையாட்டுக் கழகத்திற்கான சீரூடை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் குறித்த விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 20 வீரர்களுக்கு 65 ரூபா பெறுமதியில் சீருடைகள் வழைங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிநகரில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரஜனிகாந்தின் ஏற்பாட்டில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு. சந்திரகுமாரினால் விளையாட்டுக் கழத்தின் தலைவரிடம் சீருடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று(25) ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தினேஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*